Thursday, September 3, 2009

தேர்தல்

ஐந்தாண்டு காலங்கள்
கண்டதென்ன? கொண்டதென்ன?
சிந்தித்துப் பார்க்கவே
குழப்பந்தான் மிஞ்சுதே!


குழம்பிய தெளிவினிலே
“குறள்’ கின்றேன்
கேளுங்கள்.........


தேர்தல் என்பது யாதெனின் என்றேனும்
ஓரிரு நலம் பயக்குவது.

அரசியலில் ஊழல் நன்றன்று அன்று
ஊழலே அரசியல் இன்று.

ஊழல்செய்வா ரனைவ ரவருள்சிறுக
செய்வாரை கொணர்தல் நன்று.

ஒட்டுவார் ஒட்டுக சுவரொட்டி அதனை
ஆடுகள் மேயு மாறே.

தேர்தலில் வாக்களிப்பார் வாக்கு அச்சொல்
நீரினில் எழுதிய சொல்.


5 comments:

குப்பன்.யாஹூ said...

கவிதை அருமை.

ஆனால் என் பார்வையில் இப்போது நடக்கும் தேர்தல்களில் வாக்காளர்கள் (குறிப்பாக தமிழ்கத்தில்) நன்கு தெரிந்தே சிந்தித்தே வாக்கு அளிக்கின்றனர்.

எந்த கட்சி அதிகம் பணம் அளிக்கிறதோ அந்த கட்சிக்கு தங்கள் வாக்குகளை விற்கின்றனர். எனவே அரசியல் வாதிகளியோ, ஜன நாயக முறைகளியோ குறை கூறுதல், கிண்டல் செய்தல் தவறு.

வாக்காளர்களாகிய நம் மீதே தவறு உள்ளது.

காயத்ரி said...

ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் :)

தேர்தலுக்கு பிறகு தங்களது பணம் சுரண்டப்பட போகிறது என்று தெரிந்தும் தேர்தல் சமயத்தில் கொடுக்கப்படும் அற்பப் பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்கும் வாக்காளர்களின் மீது தான் தவறுள்ளது.....

தட்டிக்கேட்க ஆளில்லாதவரை, அவர்கள் விட்டெரியும் பணத்திற்கு அடுத்தவர்கள் கையேந்தும்வரை அரசியல்வாதிகள் இப்படித்தான் இருப்பர்! அவர்களின்மீதும் தவறில்லை, ஜனனாயகம் மீதும் தவறில்லைதான்!

துளசி said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க காயத்திரி,

Anonymous said...

தவறு நீங்கள் நினைப்பது ,அரசியல்வாதியாக இருப்பதும்,தொழிலதிபரகா இருப்பது எவ்வளவு கடினம் என புரியும் நான் படித்து கொண்டுதான் இருக்கிறேன் (எதையும் சேராதவன்)

காயத்ரி said...

அரசியல்வாதியாக இருப்பது கடினம் என்று எந்த கோனத்தில் சொல்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது!

ஏமாற்றுவது, சுரண்டுவது, லஞ்சம், தவறுகளை மறைப்பது என இன்னும் எத்தனை கடமைகள்? ஆமாம் கடினம்தான் நண்பரே!

நான் நினைப்பதுதான் சரி, உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது உங்கள் விருப்பம்...

இன்றைய காலக்கட்டத்தில் நேர்மையான அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணினால்கூட விரல்கள் மீதம் இருக்கும், அதுதான் உண்மை!