Sunday, January 4, 2009

இன்றென்ன மனிதன்?

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி! அவன்
தன்மைக்கு விடை கொடுத்தோம் பாரீர்!

மண்காக்க உயிர் கொடுத்தார் தோழர்!
இன்றவர்தம்
வன்மைக்கு கை கூப்ப சோம்பல்!

நட்பை காக்க
பொருள் துறந்தாரன்று!

பொருள் சேர்க்க
நட்பை துறக்கிறாரின்று!

உண்மை வேறு
பொய் வேறு அன்று!
உண்மையும் பொய்யும்
ஒன்றுதானின்று!


நேற்றென்ன ?
இன்றென்ன?
நாளையென்ன?
.

.
.
.
பொருள்
காலத்தை வென்றும்
நிற்பதென்ன?

மனிதனென்ன?
குரங்கென்ன?
மரமென்ன?


யாவும் ஒன்றென்றே
உரைத்தால் தவறென்ன?



...

3 comments:

பிரகாஷ் said...

கவிதை தொகுப்புகள் நன்று.

குறிப்பாக‍ ‍ ' க்ற்றது கையளவு' அருமை.

உங்களின் சொந்த படைப்பென்றால்,
மனமார்ந்த வாழ்த்துகள்.


---பிரகாஷ்

காயத்ரி said...

சொந்த படைப்புகள்தான் நண்பரே! பாராட்டிற்கு மிக்க நன்றி!

vishwa said...

Hello Gayathri,Well said.

Porul serka Natpai Durakirar indru!
Well said!
Manithanenna...
Panam illadavan pinam!
You are obslutely right!!
Br,
Vishwa