Saturday, January 3, 2009

வீணர்!

கைரேகை கொண்டிங்கு
எதிர்காலம் கணிக்கிறார்...
கைகள் அற்றவனுக்கும் – உண்டு
எதிர்காலம் இனிதெனவே!

ஆயுள் நீளும்
ஆனந்தம் கூடும் –என்கிறார்
நெடுநோய் கண்டுழலும்
துன்பஸ்தன் அவனுக்கே!

"நோய்நாடி நோய்முதல் நாடி" யெனும்
வள்ளுவன் வாக்கினை சாடி
ஓடுகிறார் நாடிஜோதிடர் தேடி!

கடவுளை நம்புதல்
இல்லை யெனினும்
ஜோதிடம் நம்புகிறார்!

கைகொண்ட முயற்சியை
கைவிடுவார் அது
வீணெனவே ஜோதிடர்
கணித்தாரென் றுரைத்தே!

வீணரிவர்
யாரைத்தான்
நம்புகிறார்?!