Monday, November 19, 2007

கோழை!

கண்ணிருந்தும்
காட்சித் தெரிந்தும்
குருடனானவன்

உளமிருந்தும்
நெஞ்சுரமிருந்தும்
கோழையானவன்

உயர்வினிலும்
தாழ்வினிலும்
நிலைத்திடாதவன்

இறையளித்த
வாழ்வினில்
ஜெயித்திடாதவன்

ஜீவித்தால்
பூமிக்கு இவன்
பாரமா என்ன?

மரணித்தால்
மண்ணிற்கு இவன்
உரமா என்ன?

இவன்
இருந்தால் என்ன?
இறந்தால் என்ன?

6 comments:

வினோத்குமார் கோபால் said...

நல்லதோர் கவிதைக்கு என் தலை வணங்கிச் செல்லும்
தங்களின் இந்த கவிதைக்கு எனது பாராட்டுக்கள்

காயத்ரி said...

பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே!

பணம் பணம் பணம் said...

WELDON

காயத்ரி said...

thankyou!

Unknown said...

nice.marvellous y can't u try to publish these kavithai thullikal in a book.


really u r a talented person.good weldone.go ahead. keep it up.

காயத்ரி said...

sd! thankyou for your comments and encouragement! i will try!