Thursday, November 22, 2007

அந்நியன்!

" சுதந்திரம்" - இச்சொல்லை வாசிக்கையிலாவது
ரத்தம் சிந்திய நம்வீரர்களை
எண்ணியாவதுப் பார்த்திருக்கிறாயா?

தொலைக்காட்சியில் தேசியக்கொடி,
வானொலியில் தேசியகீதம்,
எழுந்தாவது நின்றிருக்கிறாயா?

பேசுவது ஆங்கிலமொழி,
பார்ப்பது ஆங்கிலப்படம்,
கேட்பது பாப் இசை,
சுவற்றிலோ மர்லின்மன்ரோ!

அந்நியக் கலாச்சாரம்,
அதற்கோர் புகழாரம்,

'தமிழ் எனக்கு வராது"
சொல்வதில் உனக்குப் பெருமிதம்,

செல்வது அயல்நாடு
திரும்பும் எண்ணமும் தோன்றாது!

அங்கு உனை ஈர்ப்பதென்ன?
இங்கு அதில் குறைவதென்ன?

அறிவாளிகள்?
திறமைசாலிகள்?
அன்பானவர்கள்?
அறிவியல் முன்னேற்றம்?

இவையா?
பணமா?

பணமென்றால்......
அங்கேயே நீ இருந்துவிடு!
இந்நாட்டிற்கு நீ அந்நியனாகிவிடு!




2 comments:

வினோத்குமார் கோபால் said...

இந்தியனாய் இருந்திட வேண்டும்
இந்தியனாய் இறந்திட வேண்டும்

காயத்ரி said...

ஆமாம் தாங்கள் சொல்வது சரிதான்!